கோடிக்கணக்கான பணத்துடன் டுபாயிற்கு தப்பிச் சென்ற நபர்!

#SriLanka #Dubai
Dhushanthini K
1 week ago
கோடிக்கணக்கான பணத்துடன் டுபாயிற்கு தப்பிச் சென்ற நபர்!

மினுவாங்கொடையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஏழரை கோடி ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிறிதொரு சந்தேக நபர் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மினுவாங்கொடையில் உள்ள தனியார் வங்கிக்கு குறித்த பணத்தை எடுத்துச் சென்ற சாரதி ஒருவர், பணத்துடன் தப்பிச் சென்ற நிலையில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து மூன்று கோடியே 55 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் மீட்கப்பட்டது. 

கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் டுபாயிற்கு தப்பிச் சென்றது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 

தரிந்து பெரேரா என்ற சந்தேக நபர் பணப் பையுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வது சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. அவரை கைது செய்யவதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!