இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு!
#SriLanka
#Indonesia
#Land_Slide
Dhushanthini K
1 week ago
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடக்கே ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
வட சுமத்ரா மாகாணத்தில் பெய்த மழையால், நான்கு மாவட்டங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன, இந்த ஆண்டு இறுதி வரை தீவிர வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
டெலி செர்டாங்கில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்ததாக வடக்கு சுமத்ரா காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஹடி வஹ்யுடி தெரிவித்தார்.
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 20 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.