மோசமான வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
#SriLanka
#weather
#Flood
Dhushanthini K
1 week ago
சீரற்ற வானிலையில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது, 120,534 குடும்பங்களைச் சேர்ந்த 401,707 பேர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் 345 பாதுகாப்பான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், 11,663 குடும்பங்களைச் சேர்ந்த 36,330 பேர் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.