வங்காளதேசத்தில் இஸ்கான் அமைப்பை தடை செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

#Protest #Bangladesh #Banned #HighCourt
Prasu
1 week ago
வங்காளதேசத்தில் இஸ்கான் அமைப்பை தடை செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

வங்காளதேசத்தில் இஸ்கான் அமைப்பின் செயல்பாடுகளை தடை செய்ய உயர் நீதிமன்றம் மறுத்து தெரிவித்துள்ளது. 

அந்நாட்டில் இந்து அமைப்பு தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் இஸ்கானில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். இவரது கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்தன. இந்த சம்பவத்தின் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் வெடித்தது.

இது தொடர்பான மோதலில் அரசு வழக்கறிஞர் சைபுல் இஸ்லாம் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து வங்காளதேசத்தில் இஸ்கான் அமைப்புக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் மொனிருதீன் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு நீதிபதி பராஹ் மஹ்பூப், நீதிபதி டெபாசிஷ் ராய் சவுத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வங்காளதேசத்தில் 'இஸ்கான்' அமைப்பிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். 

 மேலும், வங்காளதேசத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அரசு கவனமாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!