அது என்ன BLACK FREIDAY? - எப்படி உருவாகியது?

#SriLanka #Article
Dhushanthini K
2 hours ago
அது என்ன BLACK FREIDAY?  - எப்படி உருவாகியது?

கருப்பு வெள்ளி என்ற பெயர் உண்மையில் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் தோன்றியது. 1950களில், பிலடெல்பியா நகரம் ஆண்டுதோறும் ராணுவ-கப்பற்படை அமெரிக்க கால்பந்து போட்டியை நன்றி தெரிவிக்கும் தினத்திற்குப் பிறகான சனிக்கிழமை நடத்தின. இந்நிகழ்வுக்காக வந்திருந்த ரசிகர்கள் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் செய்ய நகருக்குள் குவிந்தனர். 

இதனால், நகரம் சுற்றுலாப் பயணிகள், அமெரிக்க கால்பந்து ரசிகர்கள் மற்றும் கிறிஸ்துமஸ் விற்பனைக்காரர்களின் வருகையால் பெரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்டநெரிசலை சந்தித்தது. பிலடெல்பியா காவல் துறை இந்த மொத்த நெரிசலை சமாளிக்க முழுமையாக சம்பவ இடங்களில் ஈடுபட வேண்டியிருந்தது.

 அனைத்து காவல்துறையினரும் அந்த நாளில் செயல்பட வேண்டியிருந்ததால், நன்றி தெரிவிக்கும் தினத்திற்குப் பிறகு வெள்ளிக்கிழமை விடுமுறை எடுக்க அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.  முழு உழைப்பும் தேவைப்பட்டதால், அந்த வெள்ளியன்று காவல்துறை அதிகாரிகள் அந்த நாளை "கருப்பு வெள்ளி" என அழைத்தனர்.

 பெயர் நிலைத்தது எப்படி?

 1960களில் "கருப்பு வெள்ளி" என்ற பெயர் பொதுவாகப் பரவியது. இதன் எதிர்மறையான அர்த்தத்தை அகற்ற சில்லறை விற்பனையாளர்கள் "பெரிய வெள்ளி" என மறுபெயரிட முயன்றும், அசலான பெயர் நிலைத்தது. பின்னர், 1980களில், "கருப்பு" என்ற வார்த்தை மறுபரிசீலனை செய்யப்பட்டது, கடைகள் அந்த நாளில் வெற்றிகரமான விற்பனை மூலம் நயம் (இலாபத்துக்கு) செல்லும், அதாவது "சிவப்பு" நிறப் பதிவு (இழப்பு) என்பதாகவும் "கருப்பு" நிறம் (இலாபம்) என்பதே விற்பனைக்காரர்களின் விளக்கமாக அமைந்தது.

 விளம்பர நிகழ்வில் வளர்ச்சி பல ஆண்டுகளாக, கருப்பு வெள்ளி சின்னமான விற்பனை நாளிலிருந்து ஒரு பிரமாண்ட விளம்பர நிகழ்வாக மாறியது. இது வாடிக்கையாளர்களை சிறப்புச் சலுகைகளுடன் இழுக்கும் நாளாக உருவானது. எதனைத்தொடர்ந்து, 2000களின் தொடக்கத்தில் "சைபர் திங்கள்" இணைய வழி வியாபாரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. 

இதன் மூலம் கருப்பு வெள்ளி இணைய இயங்கலை (ஒன்லைன்) மற்றும் நேரடிச் சந்தைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றைய மாற்றங்கள் மகுடநுண்ணி (கோவிட்-19) நுண்ணித் தொற்றுக் காரணமாக, மக்கள் நேரடியாக கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது குறைந்தது. 2021ஆம் ஆண்டு ஆய்வின் படி, 65 சதவீதம் நுகர்வோர் முந்தைய முறையில் கடைகளுக்குச் செல்லவதில்லை என்று தெரிவித்துள்ளனர். 

இருப்பினும், இன்றைக்கு மக்கள் மீண்டும் நேரடியாக வணிக அங்காடிகளுக்குச் செல்வது வளர்ச்சியடைந்து வருகிறது. அண்மை ஆய்வுகளின்படி, 71 சதவீதம்  நுகர்வோர் தொற்றுநோய்க்கு முந்தைய காலத்தைவிட அடிக்கடி பொழுதுபோக்காவே கடைகளுக்குச் சென்று வருகின்றார்கள். வெற்றிக்கான வழிகள் கருப்பு வெள்ளியில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக சிறப்புச் சலுகைகள், இயல்பான சந்தை அனுபவம், மற்றும் இனிமையான சூழல் ஆகியவை முக்கியம். 

பொருட்களின் காட்சி, தகுந்த இசை, மற்றும் பண்டிகை வாசனைகள் வாடிக்கையாளர்களுக்கு நேர்மறையான உணர்வை வழங்க உதவும். கருப்பு வெள்ளி வணிக வளர்ச்சிக்கான ஒரு தந்திரமான நாளாகவே மாறியுள்ளது. சிறந்த அனுபவங்களை வழங்கி, வணிகத்தை முன்னேற்றும் பொறிமுறையே கறுப்பு வெள்ளி ஆகும். வாய்ப்புள்ளோர் வணிகத்தில் சிறந்து விளங்க இந்த நுட்பத்தையும் பயன்படுத்துங்கள். 

 செய்தித் தொகுப்பு: சிவமகிழி

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!