அர்ச்சுனா மீது பாராளுமன்றில் தாக்குதல்? நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் கோரிக்கை

#SriLanka
Mayoorikka
17 hours ago
அர்ச்சுனா  மீது பாராளுமன்றில் தாக்குதல்? நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் கோரிக்கை

பாராளுமன்றத்தில் தன்னைத் தாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக இராமநாதன் அர்ச்சுனா எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 'எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் சுஜித் என்பவர் என்னை தாக்கினார். நான் அவரை திருப்பித்தாக்க ரொம்ப நேரம் போகாது. 

ஆனால் அவர் என் தந்தையை போன்றவர். அதனால் சும்மா விட்டேன்.' என பாராளுமன்ற சபையில் அர்ச்சுனா முறையிட்டுள்ளதோடு இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சபாநாயகரிடம் முறையிட்டுள்ளார்.

 இதேவேளை தாம் யாரையும் தாக்கவில்லை என கேகாலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தெரிவித்தார்.

 யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே சஞ்சய் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 சுஜித் சஞ்சய் பெரேரா:- நான் அவரைத் தாக்கியதாக அவர் கூறுவதை நான் முற்றிலும் மறுக்கிறேன் என்றார். இதன்​போது எழுந்த குருநாகல் மாவட்ட உறுப்பினர் நளின் பண்டார, யாழ்.மாட்ட சுயேச்சை உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு வந்து மிகவும் அநாகரீகமாக நடந்துகொண்டார் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!