மாகாணசபை முறைமை ஒழிக்கப்படுமா? அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்: சபையில் சாணக்கியன்

#SriLanka
Mayoorikka
17 hours ago
மாகாணசபை முறைமை ஒழிக்கப்படுமா? அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்: சபையில் சாணக்கியன்

ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா மாகாண சபை முறையை இல்லாதொழிக்க போவதாக வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் இன்று நாடாளுமன்றின் கன்னி அமர்வின் போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

 இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இவ்வாறு கேள்வி எழுப்பினார் 

 நான் இங்கு நாட்டின் முக்கிய பிரச்சனை தொடர்பில் கதைக்க உள்ளேன் . கடந்த சில நாட்களாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மாகாணசபை முறைமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என கருத்து வெளிப்பாட்டு இருந்தார்.

 இது தொடர்பில் அரசின் உண்மையான நிலைப்பாடு தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டிருந்தார்.

 இதன் போது குறுக்கிட்ட அமைச்சர் பிமல் ரட்ணாயக்க இது தொடர்பில் எம்மால் தெளிவுபடுத்த முடியும் என்பதுடன் சிறீதரன் அவர்கள் ஜனாதிபதியுடன் கதைப்பதற்கு கோரியுள்ளார், அங்கு இக் கேள்விகளை எழுப்பலாம் என குறிப்பிட்டார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!