தென்கொரியாவில் இராணுவ சட்டத்திற்கு எதிராக 02 மணித்தியாலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

#SriLanka #world_news #SouthKorea
Dhushanthini K
3 weeks ago
தென்கொரியாவில்  இராணுவ சட்டத்திற்கு எதிராக 02 மணித்தியாலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

தென்கொரியாவில் வரவு செலவு திட்டங்கள் மீதான விவாதங்கள் இடம்பெறவுள்ள நிலையில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்துவதாக அந்நாட்டின் ஜனாதிபதி யூன் சுக் யோல் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது குறித்த சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகத்தினரின் எதிர்ப்பு காரணமாக அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரிய ஜனாதிபதி அவசரகால இராணுவச் சட்டத்தை அமுல்படுத்த தீர்மானித்த இரண்டு மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதியின் தீர்மானங்களை உதாசீனப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் கூடி ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர்.

இதனைத் தொடர்ந்தே குறித்த சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!