31 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு நிதியுதவி வழங்கும் பைடன் நிர்வாகம்!
#SriLanka
#Biden
#Africa
Dhushanthini K
4 months ago

வறட்சி அல்லது மோதலால் இடம்பெயர்ந்த 31 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு $1 பில்லியன் மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த உதவியானது 31 ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அகதிகள், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் பிற அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்யும் என்று சர்வதேச மேம்பாட்டுக்கான யுஎஸ்ஏஐடி (USAID) அறிக்கை தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் பல நாடுகள் வறட்சியை அனுபவித்து வருகின்ற நிலையில் இந்த உதவி திட்டத்தை பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.



