நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக நடந்த வராலாறு தருணம்: செவிப்புலனற்றவர் உரை
#SriLanka
Mayoorikka
1 year ago
இலங்கையின் செவிப்புலன் அற்ற முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா இன்று (6) நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.
அவர் தனது முதலாவது பாராளுமன்ற உரையில், 76 வருடங்களின் பின்னர் மாற்றுத்திறனாளியொருவர் இலங்கை நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் அரச தரப்புடன் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சுகத் வசந்த டி சில்வா தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.