முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு விளக்கமறியல்!
#SriLanka
#Court Order
#Lohan Rathwatta
Thamilini
1 year ago
குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று (07.12) நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இதன்போது வரும் 9ம் திகதி வரை அவரை காவலில் வைக்க அளுத்கடை பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
லோகன் ரத்வத்த தனது உறவினர் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது கொள்ளுப்பிட்டி சந்திக்கு அருகில் மற்றுமொரு காருடன் மோதி விபத்தை ஏற்படுத்தியிருந்தார்.
பொலிஸாரின் விசாரணையில் அவர் குடிபோதையில் வாகனம் செலுத்தியமை கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில், கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.