மக்களால் பாராளுமன்றத்திற்கு சென்றவர்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்ய வேண்டும்! (லங்கா4 ஊடகத்தின் பிரத்தியேக செய்தி)

பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்து பலர் அங்கே கதிரைகளில் அமர்ந்திருக்கிறார்கள் மக்கள் அவர்களை அரியாசனத்தில் ஏற்றி இருக்கிறார்கள்.
அதை தாண்டி பாராளுமன்றம் சென்றவர்கள் என்ன செய்ய வேண்டும் எப்படி நடக்க வேண்டும் எப்படி யாருக்காக அவர்கள் அங்கே சென்றார்கள் என்ற பொறுப்புக் கூறல்களை அவர்கள் பொறுப்பாக இருந்து கூற வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் கட்டாயம் செய்தே தீர வேண்டும் காரணம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களுக்காக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தான் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்.
அவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் முதலில் அங்கே ஒரு ஒற்றுமையை நிலவ வைக்க வேண்டும் எந்த கட்சியோ எந்த மதமோ இனமோ மொழியோ என்று தாண்டி நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் நாட்டை கட்டி எழுப்புகின்ற நாட்டின் தூண் ஆக இருக்கின்ற மக்களுக்காகவும் அவர்கள் பாடுபட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
வறுமையை துரத்துவதற்கும் வருங்கால இளைஞர்களுடைய வாழ்க்கையை தூக்கி நிறுத்துவதற்கும் அவர்களுக்கு தூணாக இருப்பதற்கும் இவர்களுடைய செயற்பாடுகள் இருக்க வேண்டும் என்பது லங்கா4 lanka4 ஊடகத்தினுடைய கருத்தாக உள்ளது.
அந்த வகையிலே இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவர் சீண்டுவதும் ஒருவரை ஒருவர் தூற்றி பேசுவதும் ஒவ்வொருவரையும் விமர்சிப்பதும் ஒவ்வொரு கட்சிகளையும் ஒவ்வொரு மதங்களை மொழிகளை விமர்சிப்பதும் போன்ற தேவையற்ற விடயங்களை பேசாமல் தவிர்ப்பது நல்லது. தேவையான விடயங்களை பேச வேண்டிய நேரத்திலே பேசுவதும் தேவையில்லாத விடயங்களை பேசுவதை தவிர்க்க கூடியதாக இருக்கிறது.
அதை தாண்டி அங்கே இருக்கின்ற சபாநாயகர் அல்லது அங்கே இருக்கின்ற அங்கம் வகிக்கின்ற அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களோ உறுப்பினர்களோ அனைவரும் இணைந்து ஒரு குடையின் கீழ் இளைஞர்களாக ஒற்றுமையாக மக்களுக்காக பாடுபட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
முதலிலே அங்கே திருத்தப்பட வேண்டிய விடயம் அங்கே அறைகூவல் விட வேண்டிய விடயம் ஜனாதிபதிக்கு தெறிக்க விடப்பட வேண்டிய விடயமாக முன்மொழிக் கல்வி இருக்கிறது. இலங்கையிலே வெறும் பெரும்பான்மை இனமாக இருக்கின்ற சிங்கள மொழி கட்டாயம் தமிழராக இருந்தாலும் சரி சிங்களவர்களாக இருந்தாலும் சரி இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி அவர்கள் கற்றிருப்பது மிகச்சிறந்ததான ஒரு அணுகுமுறையாக இருக்கிறது என்பது எங்களுடைய lanka4 அசைக்க முடியாத கருத்து.
அத்தோடு சிங்களவர்கள் தமிழ் மொழிக் கல்வியை கற்பதும் சிறந்த அணுகுமுறையாக பார்க்கின்றோம். அனைவரும் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் ஒரே தூணாக கரம் கோர்த்து அவர்கள் மும்மொழிக் கல்வியை வருங்கால இளைஞர்களுக்கும்யுவதிகளுக்கும் வருங்கால சந்ததிகளுக்கு விதைக்க வேண்டும் அந்த விதையை அவர்கள் அங்கே நாட்ட வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
அடுத்து போதையற்ற சமுதாயம் என்று பார்க்கின்ற பொழுது இளைஞர்கள் பலர் கிட்டத்தட்ட 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் போதைவஸ்துக்கு அடிமையாக இலங்கையிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதைவிட இன்னும் 25 வீதத்துக்கு மேற்பட்டவர்கள் மது போதைக்கு அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் கிட்டத்தட்ட 50 75 வீத விழுக்காட்டில் இருக்கின்றவர்கள் பெரியவர்களாக இருக்கட்டும் மாணவர்களாக இருக்கட்டும் ஏன் பாராளுமன்ற உறுப்பினர்களே சிலர் போதை மதுவிற்கு அடிமையானவர்களாக இருக்கிறார்கள், இவர்கள் அனைவரும் அந்த போதை எதிர்ப்புக்கு போதை ஒழிப்பிற்கு ஒத்துழைத்து போதை இல்லாத ஒரு இலங்கையாக உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணை வேண்டும் குரல் கொடுக்க வேண்டும் உறுதுணையாக இருக்க வேண்டும் உதவியாக இருக்க வேண்டும்.
அதை மற்றவர்களுக்கும் தங்களை அரியாசனத்தில் ஏற்றிய மக்களுக்கும் மக்களுடைய பிள்ளைகளுக்கும் வருங்கால சந்ததிகளுக்கும் அதனை விதைப்பதற்கு அவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஆயுத கலாச்சாரம் நாம் 2009 ஆம் ஆண்டு வரைக்கும் அது இராணுவமாக இருந்தாலும் சரி விடுதலை இயக்கங்களாக இருந்தாலும் சரி விடுதலை இராணுவத்தோடு இயங்கிய அந்த இதர குழுக்களாக இருந்தாலும் சரி அவர்கள் அனைவரும் ஆயுதம் தாங்கி ஒருவரை ஒருவர் கொன்று கொண்டு இருந்தவர்கள் அந்த வகையிலே நாங்கள் யாரையும் வேறுபடுத்தி பார்க்காமல் நமது இலங்கை நாட்டிற்காகவோ அல்லது தமிழுக்காகவோ அல்லது இஸ்லாத்துக்காகவோ அல்லது வேறு மொழிக்காகவோ 2009 பிற்பாடு அந்த ஆயுத கலாச்சாரத்தின் சாராம்சம் அந்த வாசனை இல்லாமல் போனதை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
பார்த்திருக்கின்றோம். அந்த வகையிலே இப்பொழுது அது தேவையற்ற விடயமாக இருக்கிறது அதற்கு அந்த பூனைக்கு மணி கட்டினால் போல் முதலில் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆயுதங்களை முதலில் களைய வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆயுதங்கள் தேவையற்ற விடயம் அவர்களுக்கு பாதுகாப்பு படைகள் ஒரு சில பாதுகாப்பாளர்கள் இருக்கிறார்கள், பாதுகாவலர்கள் இருக்கிறார்கள் அந்த வகையிலே அவர்களுக்கு அது தேவையற்றதாக இருக்கிறது.
அவர்கள் வேண்டும் என்று கேட்டார்களாக இருந்தால் அவர்கள் ஒரு பில்டப் காட்டுவதற்கும் அவர்கள் தங்களை ஒரு ஹீரோக்களாக தங்களுக்கு ஒரு ஒரு தேவையற்ற ஒரு அம்சமாக தேவையற்ற ஒரு தேவையாக அது கருதப்படுகிறது. அந்த வகையிலே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆயுதங்களை கூட களைய வேண்டும் என்பது எங்களுடைய கருத்து அத்தோடு கூட இப்பொழுதும் கூட சில இதர குழுக்கள் ஆயுததாரிகளாக இருப்பதை பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
அது சில கடந்த அரசாங்கத்தின் உடைய ஆதரவோடு இருந்திருக்கலாம் அல்லது இந்த அரசாங்கத்தினுடைய எதிர்ப்பு ஆதரவு உயர்ந்திருக்கலாம் தயவுசெய்து அந்த ஆயுதங்களும் களையப்பட வேண்டும் ஆயுதம் என்பது இப்பொழுது இலங்கைக்கு தேவையில்லாத ஒரு விடயமாக இருக்கிறது அந்த வகையிலே அந்த ஆயுதத்தை சட்டத்துக்கு நிரூபித்திருப்பவர்களை நிச்சயமாக கைது செய்ய வேண்டும் அவர்களிடத்தில் இருந்து பறிக்க வேண்டும் பறித்து ஆயுதம் இல்லாத இலங்கையாகவும் ஆயுதம் இல்லாத உலகமாகவும் பார்க்க வேண்டும் அடிப்படையாக இந்த மூன்று விடயங்களையும் பாராளுமன்றத்திலே ஒற்றுமையாக நின்று பேசினால் நிச்சயமாக இலங்கை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு போக முடியும் என்பது எமது அசைக்க முடியாத கருத்தாக இருக்கிறது.
அந்த வகையிலே நாட்டினுடைய நன்மைகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தால் அவர்கள் பல தரப்பட்ட கட்சிகளாக இருக்கலாம் பல மொழிகளாக இருக்கலாம் பல இனங்களாக இருக்கலாம் மதங்களாக இருக்கலாம் இருந்தாலும் பாராளுமன்றம் என்று பார்க்கின்ற பொழுது அங்கே ஒற்றுமையாக ஒரே தாயின் பிள்ளைகளாக இணைந்து நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு அடுத்தவரை மன்னித்து அடுத்தவரை ஆதரித்து ஒவ்வொருவரோடு ஒருவர் கேலி செய்யாமல் கிண்டல் செய்யாமல் அடுத்தவரை சீண்டாமல் ஒவ்வொருவர் இணைந்து இந்த செயற்பாட்டில் இறங்கி இலங்கையை தூக்கி நிறுத்தலாம்.



