பொலன்னறுவையில் உள்ள அரிசி ஆலையில் விசேட சோதனை நடவடிக்கை!
#SriLanka
#Polonnaruwa
Thamilini
1 year ago
பொலன்னறுவை பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் இன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அரிசி ஆலைகளில் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் அளவு, தற்போது இருப்பில் உள்ள அளவு மற்றும் சந்தைக்கு வெளியிடப்பட்ட அரிசியின் அளவு குறித்து அறிக்கை பெறப்பட்டு வருவதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய, எதிர்காலத்தில் அனைத்து அரிசி ஆலைகளிலும் தகவல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.