இலங்கை வானிலையில் மீண்டும் மாற்றம் : 75மி.மீற்றர் மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடலை அடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த முறைமையின் தாக்கம் காரணமாக, டிசம்பர் 10 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், வடகிழக்கு பருவ மழை நிலை படிப்படியாக தீவு முழுவதும் நிலைநாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75mm வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு மேலும் தெரிவித்துள்ளது.