நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற 1,042 வேட்பாளர்கள் வருமான அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை!
#SriLanka
#Election
Dhushanthini K
2 weeks ago
இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற 1,042 வேட்பாளர்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வழங்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தேர்தலில் தோற்றிருந்த 8,888 வேட்பாளர்களில் 7,412 வேட்பாளர்கள் மட்டுமே வருமானம் மற்றும் செலவு அறிக்கையை உரிய திகதியில்அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 690 கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில் 197 கட்சிகள் வருமானம் மற்றும் செலவுகளை வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் 6ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது.