அகதி அந்தஸ்துக் கோரி 14 நாட்கள் சுவிஸ் நாட்டில் இருந்த வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி! (லங்கா4 ஊடகத்தின் பிரத்தியேக செய்தி)
யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மீது சுமத்தப்படுகின்ற குற்றங்கள் சரிதானா நியாயமான தானா அல்லது பழி வாங்கலா என்பது ஒரு புறம் இருக்க தொடர்ந்து சத்தியமூர்த்தி மாத்திரம் இல்லை வைத்தியர்கள் வைத்திய துறை சார்ந்து இருப்பவர்கள் மீதும் இந்த கூட்டுச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கிறன.
இது பொறுப்போடு செய்கிறார்களா? அல்லது பொறுப்பற்று செய்கிறார்களா என்பது தெரியாத விடயமாக இருக்கிறது இருந்தாலும் கூட யாழ் வைத்தியசாலை பார்க்கின்ற பொழுது சத்தியமூர்த்தி முதன்மையாக கருதப்படுகின்றார் யாழ் வைத்தியசாலை என்று கூறியதுடன் சத்தியமூர்த்தி என்ற பெயர்தான் உச்சரிக்க கூடியதாக இருக்கிறது.
இருந்தாலும் கூட காரணம் அங்கே நடைபெற்ற விடயங்களும் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களும் அதைவிட அவரால் அந்த வைத்தியசாலை எவ்வளவு தூரம் நிர்மாணிக்கப்பட்டு உயர்த்தப்பட்டு இருக்கிறது என்பதையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. 2009க்கு முற்பாடு சத்தியமூர்த்தியின் நடவடிக்கைகள் மற்றும் சத்தியமூர்த்தி அவர்களுடைய செயற்பாடுகள் ஒருவிதமாக இருந்தது அதனை நாங்கள் இங்கே சுட்டிக்காட்ட விரும்பவில்லை.
2009 ஆம் ஆண்டுக்கு பிறகு சரணடைந்ததன் பிற்பாடு அவர்கள் ஒரு சில வைத்தியர்கள் அழைக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டார்கள் மீண்டும் அவர்கள் வெளியே விடப்பட்டார்கள். அப்பொழுது சத்தியமூர்த்தி உட்பட ஒரு சிலர் சுவிட்சர்லாந்து நாட்டிலே தஞ்சம் புகுந்தார்கள்.
சத்தியமூர்த்தி என்பவர் 14 நாட்கள் மாத்திரம் சுவிட்சர்லாந்தில் இருந்து விட்டு மீண்டும் சுவிட்சர்லாந்தில் இருக்க விருப்பமில்லாமல் மீண்டும் இலங்கைக்கு சென்றிருக்கிறார் இலங்கைக்கு சென்று அரசாங்கத்தோடு இணைந்து தன்னுடைய அந்த வைத்தியத்துறையிலே தொடர்ந்து பணியாற்றுவதற்கு சில கட்டுப்பாட்டுகளின் கீழும் மற்றும் சில ஒப்பந்தங்களின் கீழும் அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரு முதன்மை வைத்தியராக கடமை புரிந்து கொண்டிருக்கிறார்.
இப்பொழுது அவருக்கு வேறு வேறு பதவிகள் அங்கு இருந்தாலும் கூட அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன அது நிரூபிக்கப்பட்டிருக்கிறதா இல்லையா நிருபிக்கப்படுமா இல்லையா என்பதும் அது வேறொரு விடயம் அதேவேளையிலே சத்தியமூர்த்தி அவர்கள் மீது குற்றம் சாட்டப்படுகின்ற குற்றச்சாட்டுகளில் ஒரு 50% சரியாக இருந்தாலும் கூட எங்களுடைய பார்வையிலே பல மீடியாக்கள் அதாவது பல சத்தியமூர்த்திக்கு எதிரான மற்றும் சத்தியமூர்த்திக்கு ஆதரவில் இல்லாத பல மீடியாக்கள் அதாவது ஊடகங்கள் அதிகமாக youtube சேனல் நடத்துகின்றவர்கள் ஊடாக தங்களுடைய செய்திக்காக திரிவுபடுத்தி மற்றும் பழிவாங்கல்களுக்காகவும் வெளிநாட்டு முதலீடு செய்து இருக்கின்ற சில ஊடக உரிமையாளர்களும் அவர் மீது காற்புணர்வின் காரணமாகவும் இந்த பழிகளை சுமத்தி இருக்கிறார்கள்.
அது சரி தவறு தாண்டி அவர்களும் அவர் மீது சுமத்தப்பட்ட பழிகள் சரியான ஒரு ஆதாரத்தோடு இல்லாத பழிகளாக இருக்கிறது.
அதையும் நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கிறது கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற கரும்புத் தோட்ட விவகாரம் டக்லஸ் தேவானந்தா ஊடாக சத்தியமூர்த்தியிடமிருந்து மீண்டும் அதனை பெற்றுக் கொள்ளப்பட்டு பலருக்கு அங்கே பகிர்ந்து அளிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.
அந்த கரும்புத் தோட்டத்தை அபகரிப்பதற்கு சத்தியமூர்த்தி பல குறுக்கு வழிகளை பிரியோகித்தார் என்பதும் நிரூபிக்க முடியாத சில குற்றச்சாட்டுகள் உள்ளன. அத்தோடு கிளிநொச்சியில் சில சர்ச்சைக்குள் அகப்பட்டவராக சத்தியமூர்த்தி அவர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறக்கூடியதாக இருக்கிறது சில கிளிநொச்சி தொடர்பான சில பொது தொண்டு நிறுவனங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது அனைத்தும் நிரூபிக்கப்படாத உண்மைகளாக அல்லது நிரூபிக்கப்படாத விடயங்களாக இருக்கின்றன இதில் நிரூபணம் சரி தவறு என்பதை தாண்டி சத்தியமூர்த்தி என்று மாத்திரம் கூறாமல் இப்பொழுது சில மீடியாக்கள் ஒட்டுமொத்தமாக வைத்தியர்களை குற்றம் சாடுவதும் வைத்தியர்கள் மீது பழி சுமத்துபவர்களாக இருக்கிறார்கள் சத்தியமூர்த்தியின் கீழ் இயங்குகின்ற பல வைத்தியர்களோ தாதிமார்களோ அல்லது வேறு ஊழியர்களும் கூட அங்கே அசமந்த போக்கை காட்டுகிறார்கள் என்று ஒரு சில மக்கள் கூறி இருக்கிறார்கள்.
அதுவும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம் காரணம் அவர்களுடைய வேலை எவ்வளவு தூரம் அதிகமாக இருந்தது என்பதையும் நாங்கள் அவதானித்துக் கொள்ள வேண்டும் அந்த வகையில் லங்கா4 ஊடகம் சத்தியமூர்த்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அது சட்டத்தின் ஊடாக நிரூபிக்கப்பட்டால் அவருக்கு தண்டனை கிடைக்கும்.
புதிய அரசு நிச்சயமாக ஒற்றை கண்ணை மூடி அவர்கள் அவருக்கு சாதகமாகவோ பாதமாகவோ கருத்துக்களையோ அல்லது நடவடிக்கைகளோடு எடுக்க மாட்டார்கள் என்பதும் நாங்கள் இந்த ஜனாதிபதியை தேர்தல் முடிந்ததன் பிற்பாடுகள் அறியக்கூடியதாக இருக்கிறது.
அந்த வகையிலே யாழ் வைத்தியசாலையிலே நடைபெறுகின்ற அசமந்த போக்குகள் மற்றும் அக்கறையீனங்கள் என்று கூறப்படுகின்ற விடயங்களை நாங்கள் உள்ளே சென்று விசாரிக்காமல் எடுத்த எடுப்பிலே அங்கே இரவு பகலாக நித்திரையின்றி ஊதியம் வாங்கினாலும் நித்திரை முளித்து பல பழிகளையும் சுமந்து கொண்டு குடும்பங்களையும் இரவிலே வீட்டில் தனிமையாக விட்டுவிட்டு நின்று ஆண், பெண் இருபாலரும் அங்கே படும் பாட்டை ஒரு சிலர் போய் பார்க்க வேண்டும்.
இதனை லங்கா4 ஊடகம் ஒளிப்பதிவாக யாழ் வைத்தியசாலையினுடைய அனுமதியோடு வெளியிடுவதாக இருக்கிறது. ஒருபக்த்தத்தில் நின்று குற்றங்களை சுமத்தாமல் இரண்டு தரப்பு விவாதங்களையும் ஏன் அங்கே இப்படி நடக்கிறதா இல்லையா என்று அவர்களிடத்திலும் செவ்வியை பெற்று போடுவதற்கான ஆயத்தங்களை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.
அந்த வகையில் நாங்கள் அனைத்து வைத்தியர்களுக்கும் ஆதரவாக எங்களுடைய நகர்வு நகரும் என்பதில் எந்தவித ஐயம் இல்லை.