குரங்குப் பிரச்சனையை உணர்வுபூர்வமாக கையாள வேண்டும்!
காட்டு விலங்குகள் பயிர்களை அழிப்பதில் இருந்து பாதுகாக்க நீண்ட கால, விஞ்ஞான மற்றும் நிலையான தீர்வை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் சுற்றாடல் அமைச்சு மற்றும் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த பிரச்சினையை உணர்வுபூர்வமாக கையாள வேண்டும் என்றார். புள்ளிவிவரங்களின்படி, சில விலங்கு இனங்களின் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது, இது மக்களுக்கும் அவர்களின் பயிர்களுக்கும் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதில் சவாலை ஏற்படுத்துகிறது.
மக்களின் வாழ்வாதாரம், வன விலங்குகளின் உயிர்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரசாங்கம் தற்போது சமமான அணுகுமுறையை நடைமுறைப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் தங்கள் பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மக்களை அனுமதிப்பது குறித்து தங்கள் கருத்துக்களைக் கூற உரிமை உண்டு.
இருப்பினும், நிலையான தீர்வுகளை கண்டறிய விவாதங்கள் அவசியம். விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. குரங்கு, மயில், யானை போன்ற வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இவ் விலங்குகளின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சிலர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.