கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை!
#SriLanka
#Arrest
Dhushanthini K
2 weeks ago
கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் திகதி பெலவத்தை, இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (10) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
போராட்டத்தின்போது மூன்று போலீஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.