பதுளையில் பங்களா ஒன்றை ஆக்கிரமித்துள்ள வடிவேல் சுரேஷ் : அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஹாலிஎல உணுகொல்லவில் உள்ள பங்களாவை ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் இருந்து அவரை வெளியேற்றுமாறும் உனுகல்ல தோட்ட அதிகார சபைக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதனைத் தெரிவித்தார்.
வடிவேல் சுரேஷை நீக்காவிட்டால், அநியாயமாக செயற்பட்டால் தோட்ட நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் டிக்வெல்ல தோட்டத்தில் உள்ள பங்களா ஒன்றில் 13 வருடங்களாக பலவந்தமாக தங்கியிருந்ததாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான பதுளை மாவட்டத்தில் காணி விநியோகத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.