இலங்கைக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!
#SriLanka
#Bank
Dhushanthini K
2 weeks ago
இலங்கைக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது.
எரிசக்தி துறையில் எதிர்கால திட்டங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்ய இந்த நிதி வசதி பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் 70% மின்சார உற்பத்தியை புதுப்பிக்கத்தக்க மூலாதாரங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அடைய இந்த வேலைத்திட்டமும் முக்கியமானது என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.