தமிழகம் நோக்கி நகரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் : 100மி.மீற்றர் மழைக்கு வாய்ப்பு!
#SriLanka
#weather
#Rain
Dhushanthini K
2 weeks ago
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரை அருகே தமிழக கடற்கரையை நெருங்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வட மாகாணத்தில் சில இடங்களில் 100 மி.மீ.இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.