இணையத்தில் பரவும் ஆபாச காணொளிகள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
சிறார்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சிலர் வெளியிடுவதாக அமெரிக்க நிறுவனமான "நெக்மேக்" தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு உண்மைகளை தெரிவிக்குமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்டு கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட "Nekmac" என்ற இந்த இணைய நிறுவனம் உலகின் 8 நாடுகளுடன் இணைந்துள்ளதாக நீதிமன்றத்தில் பணியகம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு அங்கத்துவம் பெற்ற நாடுகளில் இணையத்தில் சிறுவர்கள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்படுவது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, குறித்த நிறுவனத்தின் "Nekmac" மென்பொருள், இலங்கைச் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் எந்தவொரு கணினி சாதனத்தின் ஊடாகவும் வெளியிடப்பட்டிருப்பதைக் கண்டறிந்து அது குறித்து இலங்கைக்கு அறிவித்ததாக பணியகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.