செல்வம் அடைக்கலநாதனுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் அவசர சந்திப்பு!

#SriLanka #Gajendrakumar Ponnambalam
Mayoorikka
2 weeks ago
செல்வம் அடைக்கலநாதனுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் அவசர சந்திப்பு!

தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கல நாதனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம் பலத்திற்கும் இடையில் இன்று (10) செவ்வாய்க்கிழமை இரவு கிளிநொச்சியில் அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,,,

 விசேடமாக அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வர உத்தேசித்துள்ள இச் சூழ் நிலையில் குறித்த அரசியல் அமைப்பை உறுதியாக அறிவித்துள்ள நிலையில்,அதனை பாராளுமன்றத்தில் எவ்வாறு எதிர் நோக்கப்போகின்றோம் என்ற விடையம் குறித்தும், குறிப்பாக தமிழ் தேசிய மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும், புதிய அரசியல் அமைப்புகொண்டு வரப்படுகின்ற சந்தர்ப்பத்திலே எங்களுடைய நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாடு, தொடர்பாகவும் கலந்துரையாட இந்த சந்தர்ப்பத்தை பயண்படுத்தி உள்ளோம்.

 நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போன்று பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் அவர்களுக்கு தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி நாங்கள் இக் கலந்துரையாடலை நடத்த வேண்டும் என்பதை நாங்கள் கேட்டு இருந்தோம்.

 அந்த வகையில் எமது தீர்வு திட்டத்தில் ஒரு பிரதியையும் வழங்கி மேலதிகமாக புது வருடத்தின் பிற்பாடு,நாங்கள் மீண்டும் கூடி தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகளை ஆழமாக ஆராய்வதற்கு நாங்கள் இனங்கியுள்ளோம்.

 அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனோடும் இவ் விடயம் தொடர்பாக பேசி புதிய வருடத்தோடு மேலதிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்க நாங்கள் யோசித்து இருக்கின்றோம்.

 அந்த சந்திப்பு பேரவையினுடைய தீர்வு திட்டத்தை ஆழமாக ஆராய்வதற்கான சந்தர்ப்பத்தை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சிவில் சமூக தலைவர்களையும் உள் வாங்கி மேலதிகமாக இவ்விடயத்தில் உள்வாங்கப்பட வேண்டிய விடையங்களை நாங்கள் வருகின்ற ஒரு சில நாட்களில் சிறிதரன் எம்.பி யோடும் பேசி முடிவு எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!