யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் மர்மக் காய்ச்சல்! இளம் குடும்ப பெண் உயிரிழப்பு
#SriLanka
Mayoorikka
1 year ago
யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்ப பெண் உயிரிழந்ததுடன் நாளுக்கு நாள் நிலைமை ஆபத்தானதாக மாறி வருகின்றது என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஐந்து நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த ஒரு பிள்ளையின் தாயாரே நேற்று செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ். பருத்தித்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்லூரி வீதி, ஓடக்கரையைச் சேர்ந்த 33 வயதான குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கடந்த 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காய்ச்சல் அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து அவர் பனடோல் மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார்.
காய்ச்சல் நிற்காததை அடுத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அவர் சென்றுள்ளார்.