காபூலில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் அகதிகள் இலாகா மந்திரி மரணம்
#Death
#Afghanistan
#Taliban
#Attack
#Minister
Prasu
4 months ago

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், அந்நாட்டின் தலிபான் அகதிகள் இலாகா மந்திரி மற்றும் இருவர் கொல்லப்பட்டனர்.
தலிபான் ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று வருடத்திற்கு முன் ஆட்சியை பிடித்தது. அதன்பின் தலிபான் வட்டாரத்தில் உள்ள தலைவர் மீது நடைபெற்ற மிகப்பெரிய தற்கொலைப்படை தாக்குதல் இதுவாகும்.
அகதிகள் அமைச்சக வளாகத்திற்குள் நடைபெற்ற தாக்குதலில் மந்திரி கலில் ஹக்கானி கொல்லப்பட்டார்.
இவர் உள்துறை பொறுப்பு மந்திரி சிராஜுதீன் ஹக்கானி மாமனார் ஆவார். சிராஜுதீன் ஹக்கானி தலிபான் நெட்வொர்க்கில் அதிகாரமிக்க தலைவராக உள்ளார்.
தலிபான் பதவி ஏற்ற பிறகு கேபினட்டில் உள்ள ஒரு தலைவர் கொல்லப்படுவது இதுதான் முதல்முறையாகும். குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.



