நாட்டின் நிதியமைப்பை பலப்படுத்துவதற்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

#SriLanka #AnuraKumara
Dhushanthini K
4 hours ago
நாட்டின் நிதியமைப்பை பலப்படுத்துவதற்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

நாட்டின் நிதியமைப்பை பலப்படுத்துவதற்கும் வினைத்திறனாக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

 நிதியமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (12) இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 மத்திய வங்கி ஒரு சுயாதீன நிறுவனமாக நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும் அதற்கு அரசாங்கம் ஆதரவளித்து வசதிகளை வழங்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

 வங்கி நிதி விவகாரங்களை வினைத்திறனாக்குவதற்கு நல்ல பொறிமுறையை உருவாக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

நிதி அமைப்பில் தற்போதுள்ள மேக்ரோப்ரூடென்ஷியல் கொள்கைகளை மேலும் அமல்படுத்துவது குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

 பொருளாதாரம் ஸ்திரமடைவதால், சொத்து தரத்தில் பாதுகாப்பான முன்னேற்றங்கள் மற்றும் விவேகமான இடர் மேலாண்மையுடன் மூலதன உருவாக்கம் ஆகியவை நிதி அமைப்பின் சிறந்த செயல்திறனுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!