இந்தியாவில் இருந்து 440 மெட்ரிக் டன்கள் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
#India
#SriLanka
#rice
Dhushanthini K
3 hours ago
இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விரைவில் பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் சுங்க திணைக்களத்தினால் விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
17 கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் கச்சா அரிசி மற்றும் புழுங்கல் அரிசி உள்ளதாகவும், அரிசி இருப்பு விரைவில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என நம்புவதாகவும் சுங்கப் பேச்சாளரும், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளருமான சிவலி அருக்கோடக தெரிவித்துள்ளார்.
இந்த 17 இறக்குமதி கொள்கலன்களில் சுமார் 440 மெட்ரிக் டன்கள் உள்ளன, இதில் 130 மெட்ரிக் டன் கச்சா அரிசி மற்றும் 300 மெட்ரிக் டன் புழுங்கல் அரிசி உள்ளது. அனைத்து இறக்குமதிகளும் இந்தியாவில் இருந்து வந்துள்ளன.