பாரிய அரிசி ஆலைகளின் மீதான கண்காணிப்பு தீவிரம்!

#SriLanka
Mayoorikka
1 year ago
பாரிய அரிசி ஆலைகளின் மீதான கண்காணிப்பு தீவிரம்!

பாரிய அரிசி ஆலைகளில் இருந்து வெளியாகும் அரிசியின் அளவை மேலும் கண்காணிப்பதற்கு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

 இதேவேளை, அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தமை மற்றும் அரிசியை பதுக்கி வைத்திருந்த 80 நபர்களுக்கு எதிராக நேற்று (12) வரை சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

 கடந்த மூன்று நாட்களுக்குள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட 201 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களைத் தேடி நாடளாவிய ரீதியில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரசபை அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!