இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் யார்?(லங்கா4 ஊடகத்தின் பிரத்தியேக செய்தி)

இலங்கையிலே இலங்கை மீன்பிடி வலையத்திற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி வந்து மீன் பிடிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு இருக்கிறது. தற்பொழுது அது குறைந்திருந்தாலும் கூட ஓரளவிலேனும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த அத்துமீறி எல்லை மீறி இலங்கை கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிக்கின்ற மீனவர்கள் யார் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.
இந்த மீனவர்கள் அதிகமானோர் கள்ளக் கடத்தல்காரராக இருக்கின்றார்கள் என்பது மறைமுகமாக இருக்கின்ற ஒரு செய்தியாக இருக்கிறது.
இருந்தாலும் கூட அதில் நாங்கள் ஆய்வு செய்வதற்காக ஒரு சில விடயங்களை நாங்கள் ஆராய்ந்தோம் கள்ளக் கடத்தல் காரர்களுக்கு பின்னால் பின்புறமாக நின்று மீனவர்கள் என்ற போர்வையிலே மீனவர்கள் மீன் பிடித்தல் போன்று அந்த கள்ளக் கடத்தல் பொருட்களைக் கொண்டு வந்து கடற் படையினரிடம் சேர்க்காமல் கடத்துகின்ற பொழுது சில சமயங்களில் அது கடற்படையினரிடம் சிக்கும் பொழுது அதனை கடலுக்குள் எறிந்து விட்டு அவர்கள் அகப்படுகிறார்கள்.
இவ்வாறு கைது செய்யப்படுகின்ற பொழுது அவர்கள் எல்லை மீறி மீன்பிடிக்கின்ற மீனவர்களாக கருதப்படுகிறார்கள் அடைக்கப்படுகிறார்கள் சில வேளைகளில் அவர்களுடைய கப்பல்கள் அவர்களுடைய அல்லது வள்ளங்கள் பறிமுதாலாகின்றது.
அதன் பிற்பாடு அவர்கள் கைது செய்து ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிற்பாடு சில வழிகளை இந்திய அரசின் தலையீட்டின் பின்னால் அவர்கள் நீதிமன்றத்தில் அவர்களை ஒப்படைக்கப்பட்டு பின்னர் அவர்கள் நாட்டுக்கு திருப்பப்படுகிறார்கள். சரி இது நடைமுறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விடயமாக இருக்கிறது இந்த கள்ளக் கடத்தல் செய்கின்றவர்கள் உண்மையிலேயே மீன்பிடிக்க மீனவர்கள் போன்ற போர்வையில் வருகிறார்களா என்று நாங்கள் பார்க்கின்ற பொழுது அதாவது இந்த மீனவர்கள் யார் இந்த மீனவர்கள் பிடிக்கப்படுகின்ற பொழுது அந்த மீனவர்கள் பின்னணியை நாங்கள் நோக்க வேண்டும்.
அங்கே பிடிக்கப்படுகின்ற பிடிபடுகின்ற அந்த மீனவர்களுடைய பின்னணியை இந்தியாவிலே எப்படிப்பட்ட குடும்பம் அவர்கள் வறியவர்களா? வசதியானவர்களா? அல்லது வேறு யாரின் பின்னால் இருந்து அந்த மீனவர்களுடைய போர்வையிலே மீன்பிடிக்க தான் வருகிறார்களா? இவர்களுக்கு பின்னணியிலே இருக்கின்ற தொடர்புகளையும் இவர்கள் வந்த வந்த படகு யாருடைய சொந்தம் எந்த சம்மாட்டிக்கு சொந்தம் என்று அந்த சம்மாட்டியினுடைய பின்னணியை நாங்கள் நோக்கி பார்க்க போனால் நிச்சயமாக அவர்களுடைய பின்னணியை இந்திய காவல் படையோடு இணைந்து அவருடைய பின்னணியை ஆராய்ந்து பார்ப்போமாக இருந்தால் அவர்கள் உண்மையிலேயே மீன்பிடிப்பதற்காக வருகிறார்களா அல்லது கள்ளக் கடத்தலுக்காக வருகிறார்கள் என்பது நிச்சயமாக புரியும். இது lanka4 ஊடகத்தின் கருத்தாக அமைகின்றது.
இதேவேளை இலங்கை மீனவர்கள் இந்த இந்திய மீனவர்களால் கடுமையாக தாக்கப்படுகிறார்கள் அதாவது அவருடைய வாழ்வாதாரம் மற்றும் மீன்கள் குறைக்கப்படுகிறது. அவர்களுடைய வலைகள் அறுக்கப்படுகின்றன அவர்களுடைய படகுகள் சேதமடைகின்றன. இலங்கை மீனவர்கள் அதிகமாக இவர்களால் தாக்கப்படுவதால் நிச்சயமாக இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். மீனவர்கள் தான் அவர்கள் அதிகமாக மீனை பிடிக்க வேண்டும் என்பதற்காக இலங்கை எல்லைக்குள் வருவார்களாக இருந்தால் இந்திய மீனவ சங்கத்தோடு இணைந்தும் இந்திய அரசோடும் இணைந்தும் தமிழ்நாட்டு அரசோடும் இணைந்தும் பேச்சுவார்த்தையின் மூலமாக இதற்கு ஒரு தீர்வினை பெற்று கொடுக்க முடியும் என்பது lanka4 ஊடகத்தின் நம்பிக்கை.
அல்லது மீனை எப்படி பிடிப்பது அதற்கு உரிய ஒரு சில அனுமதியைப் பெற்று கூடிய மீனை பிடிப்பதோ என்று ஒரு சில சட்ட திட்டத்தை மாற்றுவதன் ஊடாகவும் சட்ட திட்டத்தின் ஊடாக அணுகுவது ஊடாகவும் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்பது லங்கா4 ஊடகத்தினுடைய கருத்து.
தொடர்ந்து இந்த மீனவருடைய பிரச்சனை, மீனவர்களுடைய நலனுக்காக நாங்கள் குரல் கொடுப்போம் என்பதை இலங்கை மீனவர்கள் இந்திய மீனவர்கள் இரு தரப்பு மீனவர்களுக்காகவும் லங்கா4 ஊடகம் குரல் கொடுக்கும் என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றோம்.



