உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 10 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

சூரியனின் ஆதிக்கத்தில் உள்ள எண்களில் இந்த 10 ம் எண்ணும் ஒன்றாகும். ஒன்றும் பூஜ்ஜியமும் சேர்ந்து இந்த எண் 10 ஆகிறது .
சராசரி நிலையை விட உயர்ந்த நிலையை அடைய இந்த எண் வழி வகுக்கும் . அதிஷ்ட சக்கரமாக எகிப்திய பிரமிடுகளில் இந்த 10 ம் எண்ணை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது .
சரீர சுத்தி எனவும் சமஸ்கிருதத்தில் இந்த எண் பற்றி விளக்கப்பட்டுள்ளது . சூரிய சக்தியின் வலிமையையும் -தனித்தன்மையையும்-தன்னம்பிக்கை- துணிவு-தடைகளை உடைக்கும் தைரியம் ஆகியவற்றையும் இந்த எண் வழங்கும்.
இரும்பு - வாகன தொழில்களுக்கு இந்த எண் செல்வ செழிப்பை தரும் திரைப்பட துறையில் பிரகாசிக்க இந்த எண் துணை புரியும் .
பெயரின் இந்த எண் உடையவர்கள் நேர்மையும் நியாயமும் நிறைந்தவர்களாக திகழ்கிறார்கள் .
வாழ்க்கையில் நிதானமும் சுய பலமும் உண்டாகும் .சுலபமாக புகழ் பெறுவர் . மிக பெரிய அந்தஸ்தை இந்த எண் பெற்று தரும்.
பணத்தட்டுப்பாடு இல்லாத வாழ்க்கையை இந்த எண் ஏற்படுத்தி கொடுக்கும் . வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் அடக்கடி உண்டாகி வந்தாலும் மிகவும் அதிஷ்டகரான எண்ணாக இந்த எண்ணை கருதலாம்.
பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இந்த தேதிக்கு - நட்பான வகையில் இந்த 10 எண் சாதகமாக இருந்தால் உங்களின் பெயரை இந்த 10 எண் ஆதிக்கத்தில் வருமாறு அதிர்ஷ்டகரமாக அமைத்து யோகமான வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம் .



