தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை அகற்றக் கோரி போராட்டம்

#SriLanka #Jaffna #Protest
Mayoorikka
1 year ago
தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை அகற்றக் கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி நேற்று வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் முதல் இன்று சனிக்கிழமை (14) மாலை வரை போராட்டம் இடம்பெற்று வருகிறது. 

 தையிட்டியில் தமிழ் மக்களது காணிகளை இராணுவம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உரிய அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்தை அகற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 18 மாத காலமாக தொடர்ந்த இப்போராட்டம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்றும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

 இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!