பெலியத்தவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலுடன் மோதுண்ட பிரிதொரு ரயில்!
#SriLanka
#Train
Thamilini
1 year ago
பெலியத்த புகையிரத நிலையத்தில் இன்று (15) காலை ரஜரட்ட ரஜின மற்றும் சகாரிகா புகையிரதங்களின் இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் புகையிரத திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பெலியத்தையிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரஜரட்ட ரஜின புகையிரதம் இயந்திரத்தை மாற்றும் போது தவறான பாதையில் பயணித்தமையினால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சகாரிகா புகையிரதத்துடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
. இந்த விபத்தில் சகரிகா ரயில் பலத்த சேதமடைந்தது. நாளை (16) காலை ரயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.