$4 மில்லியன் மதிப்பிலான ரஷ்ய எரிபொருள் ரயிலை தாக்கிய உக்ரைன்
#Russia
#Fuel
#Ukraine
#War
#Train
Prasu
4 months ago

உக்ரேனிய பாதுகாவலர்கள் ரஷ்யாவிற்கு சொந்தமான 4 மில்லியன் மதிப்பிலான 40 எரிபொருள் தொட்டிகளை வெற்றிகரமாக அழித்துள்ளனர்.
உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SSU), Tavria செயல்பாட்டு மூலோபாயக் குழுவுடன் இணைந்து, முதன்மை புலனாய்வு இயக்குநரகம் (DIU), சிறப்பு செயல்பாட்டுப் படைகள் (SOF), மற்றும் ட்ரோன் படை ஆகியவை தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் கிரிமியாவிலிருந்து தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜபோரிஜியா பகுதிகளுக்கு எரிபொருளை வழங்கும் தளவாட விநியோக வழிகளை துண்டிப்பதே குறிக்கோளாக இருந்தது.
ஆரம்பத்தில், பில்மாக் மாவட்டத்தில் உள்ள ஒலெக்சிவ்கா கிராமத்திற்கு அருகே எரிபொருள் தொட்டிகளை ஏற்றிச் செல்லும் ரயில் சென்று கொண்டிருந்த போது, SSU இன் இராணுவ எதிர் புலனாய்வுத் துறையின் 13வது முதன்மை இயக்குநரகம் இரயில் தண்டவாளங்களை தாக்கியதாக தெரிவித்துள்ளது.



