கடந்த அரசாங்கங்களின் போது இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கொலைகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்
#people
#government
#Tamilnews
#NPP
#NationalPeople'sPower
Prasu
1 year ago
கடந்த அரசாங்கங்களின் போது இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கொலைகள் தொடர்பான விசாரணைகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான அனைத்து தகவல்களும் விரைவில் வெளிவரும் என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
லசந்த விக்ரமதுங்க வசீம் தாஜூடீனின் படுகொலைகள், பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பான சகல விபரங்களும் வெளிக்கொணரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் தலையீடுகள் இன்றி இந்த விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த விசாரணைகளின் போது மறைக்கப்பட்ட தகவல்கள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டாலும், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.