சிரியாவின் புதிய காபந்து அரசாங்கம் பற்றி ஓர் பார்வை

#government #Syria #Tamilnews
Prasu
4 months ago
சிரியாவின் புதிய காபந்து அரசாங்கம் பற்றி ஓர் பார்வை

சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியை அகற்றிய பின்னர், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைவரும், புதிய நிர்வாகத்தின் தளபதியுமான அஹ்மத் அல்-ஷாரா, முகமது அல்-பஷீரை மார்ச் வரை காபந்து அரசாங்கத்தை வழிநடத்த நியமித்துள்ளார்.

பொதுமக்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்குவதன் மூலமும், அரச வளங்கள் மற்றும் அமைச்சுக்கள் தொடர்பாக ஆயுதக் குழுக்களுக்கிடையில் அதிகாரப் போட்டி ஏற்படுவதைத் தடுப்பதன் மூலமும் நாட்டை ஸ்திரப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். 

மூன்று மாதங்களுக்குப் பிறகு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள மறுத்தால், காபந்து அரசாங்கம் மற்றும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் நம்பகத்தன்மையை இழக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

காபந்து அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் யார்? 

அல்-பஷீர் , தற்போதைக்கு, சிரிய இரட்சிப்பு அரசாங்கதின் அமைச்சர்கள் தேசிய மந்திரி இலாகாக்களை கைப்பற்றுவார்கள் என்று கூறினார். 

  • உள்துறை அமைச்சர் - முகமது அப்துல் ரஹ்மான் 
  • பொருளாதாரம் மற்றும் வளங்கள் அமைச்சர் - பாஸல் அப்துல் அஜீஸ் 
  • தகவல் அமைச்சர் - முஹம்மது யாகூப் அல்-ஒமர் 
  • நீதி அமைச்சர் - ஷாதி முஹம்மது அல் வைசி 
  • விவசாயம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் - மொஹமட் தாஹா அல் அஹமட்
  • சுகாதார அமைச்சர் - மசென் துகான்
  • அபிவிருத்தி அமைச்சர் - ஃபாடி அல்-காசிம் 
  • உள்ளூர் நிர்வாகம் மற்றும் சேவைகள் அமைச்சர் - முகமது அப்தெல் ரஹ்மான் 
  • முஸ்லிம் அறநிலையத்துறை அமைச்சர் - ஹுஸாம் ஹஜ் உசேன் 
  • கல்வி அமைச்சர் - நசீர் அல்-காத்ரி 
  • உயர் கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அமைச்சர் - அப்தெல் மோனிம் அப்தெல் ஹபீஸ்
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!