கடலுக்கு நீராடச் சென்ற 04 ரஷ்ய பிரஜைகளுக்கு நேர்ந்தக் கதி!
#SriLanka
Thamilini
1 year ago
ஹிக்கடுவை கடற்கரையில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜைகள் 4 பேர், நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
ஹிக்கடுவ பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு உயிரிழந்த நால்வரின் உயிரைக் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்விபத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆணுக்கு 40 வயது எனவும் பெண்ணுக்கு 39 வயது எனவும் 07 மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் ரஷ்ய பிரஜைகள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஹேவகே, பொலிஸ் கான்ஸ்டபிள் 96793 ஏக்கநாயக்க, பொலிஸ் கான்ஸ்டபிள் 102748 திஸாநாயக்க மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 105456 ஜயசிங்க ஆகியோரால் இந்த உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.