முன்னாள் அரசாங்கத்தில் இடம்பெற்ற சீனிவரி மோசடி தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்!
#SriLanka
#Bandula Gunawardana
Thamilini
1 year ago
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற 15.9 பில்லியன் ரூபா சீனி வரி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
2020 ஒக்டோபர் 13 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை சீனியின் விலை 50 ரூபாவாக இருந்த நிலையில் 25 காசுகளாக குறைக்கப்பட்டு இந்த வரி மோசடி இடம்பெற்றுள்ளது.
இதனால் கரூவூலத்திற்கு 16 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.