கொழும்பில் பிரபல ஹோட்டல்களில் மனித பாவனைக்கு தகுதியற்ற உணவுகள் விற்பனை!
#SriLanka
#Colombo
Thamilini
1 year ago
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உள்நோயாளிகள் அதிகளவில் உணவு பெறும் பல ஹோட்டல்களில் மனித பாவனைக்குத் தகுதியற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிட வரும் பலர் புஞ்சி பொரளை பிரதேசத்தில் உள்ள கடைகளிலேயே உணவுகளை பெற்று செல்கின்றனர்.
சில கடைகளில் மனிதர்கள் உண்ணத் தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்வதாக பல தகவல்கள் வெளியாகின.
அதன்படி பொரளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
அங்குள்ள ஒரு கடையில், மனிதர்களுக்கு மட்டுமின்றி, விலங்குகளுக்கும் கொடுக்கக் கூடாத அளவிலான உணவுப் பொருட்களை அதிகாரிகள் அழித்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.