உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 13 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

ஆங்கிலேயர்களுக்கு அச்சத்தை தரக்கூடியதாக இந்த எண் இருப்பதால் ஆங்கிலேயர்கள் இந்த எண்ணை அஞ்சி ஒதுக்கி விடுகிறார்கள்.
பலவிதமான தோல்விகளையும் சோதனைகளையும் தந்து வெற்றியை தர வல்லது இந்த 13ம் எண் .
FAIL என்ற ஆங்கில சொல்லின் மொத்த கூட்டு எண்ணிக்கை இந்த 13எண் ஆதிக்கத்தில் வருவதை நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன் உயர்ந்த குணங்களான சத்தியம் தவறாமை நேர்மையான குணம் இரக்கக் சுபாவம் முதலிய உயர்ந்த குணங்கள் இருந்தால் பெரிய பதவியையும் குபேர சம்பத்தையும் இந்த எண் பெற்று தரும்.
இந்த எண்ணுக்கு ஸ்ரீராமனை போல் தர்மமான வழி தேவை. இந்த 13 ம் எண் நல்லவர்களுக்கு நாட்டையும் , ஆட்சி பீடத்தில் அமரகூடிய சூழ் நிலையையும் உருவாக்கி கொடுக்கும்.
மனைவி மக்கள் சகோதரர்கள் இவர்களிடம் மன சஞ்சலம் ஏற்பட்டு தன்னுடைய இருப்பிடத்தை விட்டு வேறு இடத்தில் வாசம் செய்யும் சூழ் நிலையம் ஏற்படலாம் . RAMAN என்ற பெயர் 13 ம் எண் ஆதிக்கத்தில் வருவதை காணலாம் .
இயேசு கிறிஸ்து 13 பேர்களுடன் சேர்ந்து உணவு உண்ட பொழுது காட்டி கொடுக்கப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்ல பட்டார் என்பதால் கிறிஸ்துவ நாடுகளிலும் மற்ற நாடுகளிலும் இந்த எண்ணை கண்டு ஒதுக்குவதற்கு ஒரு காரணமாகும்.
இந்த பதிமூன்றாம் எண் ஒரு தனி மனிதனின் பெயரில் வரும்பொழுது பல விதமான சோதனைகளையும் வேதனைகளையும் வழங்கி வந்தாலும் நிறுவனங்கள் கம்பெனிகள் போன்றவைகளுக்கு பெயர் எண்களாக வரும்பொழுது அதிர்ஷ்டத்தை வாரி வழங்குகிறது , வண்டி வாகன துறைகளுக்கு இந்த எண் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும்.
உதாரணத்திற்கு TVS நிறுவனத்தின் மொத்த கூட்டு எண் இந்த 13 ம் எண்ணில் வருவதை காணலாம். TVS BPL HMT AMWAY போன்ற நிறுவனங்களின் பெயர்களும் இந்த 13 ம் எண்ணில் வருவதை காணலாம்.
1 என்ற சூரியனும் 3 என்ற குரு பகவானும் சேர்ந்து ராகு பகவானின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த 13 ம் எண் பெண ராசியான ரிஷப ராசியில் உச்சமடைவதை குறிப்பதால் பெண்களால் பிரச்சனைகளையும் சிரமங்களையும் இந்த எண்ணில் உள்ளவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும் தான் விரும்பாவிட்டாலும் வேதனை தரும் நிகழ்ச்சிகளும் சம்பவங்களும் வாழ்க்கையில் நடந்துகொண்டே இருக்கும் .
தான் செய்வது தர்மத்திற்கு மன சாட்சிக்கு விரோதமான செயல் என்று தெரிந்திருந்தும் அடுத்தவர்களை தண்டிக்கும் சூழ்நிலை ஏற்ப்படும்.
மேன்மையான அந்தஸ்தில் இருந்தாலும் சஞ்சலமான மன நிலை உடனும் , வேதனையுடனும் வாழ்க்கையை ஓட்ட வேண்டி இருக்கும் பிறந்த தேதியிலும் பிறந்த தேதியின் கூட்டு எண்களிலும், பிறந்த தேதியில் பிரமிடு கூட்டு எண்களிலும் 1 10 19 28 வருபவர்களுக்கு மட்டும் இந்த எண் அதிர்ஷ்டத்தை தரும்.



