பாடசாலை மாணவர்களுக்கு 6000 ரூபாய் வழங்க திட்டமிடும் அரசு!
#SriLanka
#Student
Thamilini
1 year ago
அடுத்த ஆண்டு (2025) முதல் பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக 6000 ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 25,000 மாணவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது பாடசாலை மாணவர்களில் 55 வீதத்திற்கும் அதிகமானோர் அதிக பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கிராமிய மற்றும் பெருந்தோட்டப் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.