புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்யா

#Russia #Vaccine #Tamilnews #cancer
Prasu
4 months ago
புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்யா

புற்றுநோய்க்கு தங்கள் நாடு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. உலகளவில் பலரை ஆட்டிப்படைக்கும் கேன்சர் எனப்படும் புற்றுநோயை குணப்படுத்தப் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் mRNA அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷிய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

ரஷிய விஞ்ஞானிகள் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

 அதன்படி இன்று புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கிவிட்டோம் என்றும் இந்த தடுப்பூசி 2025 முதல் சந்தைகளில் கிடைக்கும் என்றும் தடுப்பூசிகளை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாகவும் ரஷிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!