உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 14 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

#people #Lanka4 #Numerology
Prasu
3 months ago
உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 14 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

மிக்க அபூர்வமான சக்திகளை கொண்டது இந்த எண். இவர்களுடைய வாதங்கள் அமைப்புடனும் தர்க்க ரீதியாகவும் இருக்கும். எதையும் யோசிக்கும் தன்மை உண்டு. தெய்வீக மான வாழ்வு உண்டு. ஷேமம், சுபிக்சம் என மந்திர சாஸ்திர நூல்களில் இந்த 14 ம் எண்ணை பற்றி கூறப்பட்டுள்ளது. 

சூரியன் என்ற 1 ம் எண்ணும் ராகு என்ற நான்காம் எண்ணும் இணைந்து அதாவது ஆத்மகாரனும் போககாரனும் இணைந்து வித்யாகாரகன் புதனை பூரண தத்துவமாக காட்டுகிற 14ம் எண் வியாபார வசியத்தை தரக்கூடியது. 

இந்த எண்ணிக்கையில் உள்ள நபர்களை சுற்றி எப்பொழுதும் நாலு பேர் இருந்து கொண்டே இருப்பார்கள். சதா சஞ்சாரம், பல வித மனிதர்களின் சந்திப்பு, ஜன கூட்டம், வித விதமான வியாபார பொருட்கள் ஆகியன இந்த 14 எண்ணின பரபரப்பான அம்சமாகும். 

பரம் பிரம்மத்தின் மூலம் அறம், பொருள், இன்பம், வீடு இந்த நான்கையும் பெறுபவர்கள் இந்த 14 ம் எண்ணில் பெயர் உடையவர்களே. ஏற்றுமதி இறக்குமதி, கொடுக்கல் வாங்கல், பணபுழக்கமுள்ள துறைகள், கணித நிபுணத்துவம் அனைத்தும் இந்த 14 எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு அமைகிறது.

கலைகளில் மிகுந்த ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் ஆராய்ச்சி மனப்பான்மையையும் இந்த எண் வழங்குகிறது. திரவம் சம்பந்தப்பட்ட தொழில்களால் அதிகமான லாபங்கள் உண்டாகும்.

நாவன்மையும் நகைச்சுவை திறனும் இவர்கள் வாய்க்க பெறுவார்கள். ஒரு ஊரின் பெயர் இந்த 14 ம் எண்ணில் அமைந்தால் வளமும் நலமும் எப்பொழுதும் வளம் குன்றாமல் இருக்கும். வியாபார பொருள்களுக்கு 14 ம் எண் வருகிறமாதிரி பெயர் அமைந்தால் பொது ஜனங்கள் மத்தியில் அது மிகுந்த வரவேற்பை பெரும். 

சூரிய ஆதிக்கமும் ராகு ஆதிக்கமும் கலந்து இந்த 14ம் எண் இருப்பதால் காதல் விஷயங்களில் கௌரவ குறைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. நிதானமும் கவனமும் இதய பூர்வமான விஷயங்களில் கையாளப்படவேண்டும். 

எட்டாம் எண் நேயர்கள் இந்த 14 ம் எண்ணில் பெயரை அமைத்து சிறப்பு நிலை அடையலாம். வசீகரம் மேலோங்கும். வசீகரத்தில் வளம் பெறலாம் . 

 இந்த 14 ம் எண்ணில் பெயர் உடையவர்களுக்கு 5,14,23,18,27 மற்றும் கூட்டு எண் 5 மற்றும் 9 வரும் தினங்கள் மிக்க அதிர்ஷ்டம் வாய்ந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!