மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி பலி!
#SriLanka
Thamilini
1 year ago
நவகத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தரனகஹவெவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குறித்த குழந்தை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நவகத்தகம பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய உலா குருகதேய என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாதுகாப்பற்ற மின் கேபிளில் இருந்து மின்சாரம் பெற்று பிளெண்டரை இயக்க முற்பட்ட போது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.