சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
#SriLanka
#Sajith Premadasa
Thamilini
1 year ago
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமைகள் தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் இன்று (19.12) காலை பாராளுமன்ற ஹன்சார்ட் திணைக்களத்தில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம், சஜித் பிரேமதாசவே இந்தச் சான்றிதழ்கள் மற்றும் ஏனையவற்றை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமை தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இந்தக் கல்வித் தகைமைகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.