அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை நீட்டிக்க தீர்மானம்!
#SriLanka
#rice
Thamilini
1 year ago
அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அது தொடர்பான இறுதி உடன்பாடு எட்டப்படவுள்ளது.
இதன்படி, அரிசி இறக்குமதியை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் 24ஆம் திகதி வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரிசி ஏற்றுமதிக்கு அரசாங்கம் வழங்கிய கால அவகாசம் இன்று (20.12) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.