அரிசி தட்டுப்பாடு : கடந்த 10 நாட்களில் நாடளாவிய ரீதியில் 578 திடீர் சோதனைகள் முன்னெடுப்பு!

#SriLanka #rice
Thamilini
1 year ago
அரிசி தட்டுப்பாடு : கடந்த 10 நாட்களில் நாடளாவிய ரீதியில் 578 திடீர் சோதனைகள் முன்னெடுப்பு!

கடந்த 10 நாட்களில் நாடளாவிய ரீதியில் 578 அரிசி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

சில இடங்களில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்த முறைப்பாடுகளின் பிரகாரம், மாவட்ட மட்டத்திலான சோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. 

கடந்த சில நாட்களாக சந்தையில் அரிசி தட்டுப்பாடு காணப்பட்டபோதிலும் இறக்குமதி செய்யப்படும் நடவடிக்கை தொடர்வதால் அந்த நிலைமை படிபடியாக குறைவடைந்து வருவதை காணக்கூடியதாக இருக்கிறது என நுகர்வோர் அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் நாயகம் திரு.திலகரட்ன பண்டா தெரிவித்துள்ளார். 

அரிசி இறக்குமதி நீடிக்கப்பட்டுள்ளதால், பண்டிகைக் காலத்தில் அரிசி தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு வழங்க முடியும் எனக் கூறிய அவர்  பண்டிகைக் காலங்களில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!