கோர விபத்தில் சிக்கிய பேருந்து : இருவரின் நிலை கவலைக்கிடம்!
#SriLanka
#Accident
Dhushanthini K
5 hours ago
கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் கடுகன்னாவ, டாசன் டவருக்கு அருகில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கடுகன்னாவ, ஹேனாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஆபத்தான நிலையில் உள்ள இருவர் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.