பொதுத் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கைகளை வழங்காதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம்!
#SriLanka
Dhushanthini K
4 hours ago
பொதுத் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்களின் பெயர்களை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான செலவின அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்களின் பெயர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை பொதுத்தேர்தல் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வழங்குவதற்கான அறிவிப்பின்படி, அத்தகைய அறிக்கையை சமர்ப்பித்த வேட்பாளர்களின் பெயர் பட்டியல் மாவட்ட செயலாளர் அலுவலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.