1000 கிலோ அரிசியை திருடிய இருவர் கைது!
#SriLanka
#rice
Dhushanthini K
4 hours ago
சுமார் 1000 கிலோ அரிசியை திருடிய இருவரை களுத்துறை தெற்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களுத்துறை மத்திய சந்தி பகுதியில் மொத்தமாக அரிசி விற்பனை செய்யப்படும் கடையொன்றில் இருந்து இந்த இரண்டு சந்தேக நபர்களும் அரிசியை திருடியுள்ளனர்.
இரவு வேளையில் இரண்டு முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்தி இந்த திருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்த காட்சிகள் அருகில் உள்ள கடையொன்றின் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.