அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் இறுதி வெளிநாட்டுப் பயணம்

#America #government #President #Trump
Prasu
3 months ago
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் இறுதி வெளிநாட்டுப் பயணம்

சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றார். 

டிரம்ப் ஜனவரி 12ம் தேதி அதிபராகப் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் இத்தாலி செல்கிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், போப் பிரான்சிஸ் மற்றும் இத்தாலிய அதிபர் செர்ஜியோ மேட்டரெல்லா, பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஆகியோரை சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் 9ம் தேதி முதல் ஜனவரி 12ம் தேதி வரை ரோம் நகருக்குச் செல்கிறார்.

அதிபர் ஜோ பைடன் ஜனவரி 10ம் தேதி அன்று போப் பிரான்சிசை சந்திக்கிறார். அப்போது உலகம் முழுவதும் அமைதியை முன்னேற்றுவதற்கான முயற்சிகளைப் பற்றி விவாதிப்பார் என தெரிவித்துள்ளது.

 ஜனவரி 12ம் தேதி அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்பிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு முன் அதிபர் ஜோ பைடன் செல்லும் கடைசி வெளிநாட்டுப் பயணமாக இது இருக்கலாம் என தெரிகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!